கொரோனா நெருக்கடியில் சிக்கித்தவித்த யாழ் பல்கலை மாணவர்களுக்கு உதவிபுரிந்த சமுகசேவையாளர்

கொரோனா நெருக்கடியில் சிக்கித்தவித்த யாழ் பல்கலை மாணவர்களுக்கு உதவிபுரிந்த சமுகசேவையாளர்

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் அனைத்து இன மாணவர்களும் தற்போதைய கொரோனா நெருக்க டி நிலையில் தாம் தங்கியிருக்கும் விடுதிகளின் வாடகைப்பணத்தை செலுத்த முடியாத நிலையில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் சமுக சேவையாளர் தியாகேந்திரன் அந்த பணத்தை செலுத்த முன்வந்து மாணவர்களுக்கு உதவி புரிந்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த உதவி கோரிக்கை அவரிடம் முன்வைக்கப்பட்டது.

இதன்படி தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி பங்களிப்பின் 2 வது கட்டமாக தனியார் விடுதியில் இருந்து கல்வி பயிலும் பல்கலைக்கழக_மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நிலையை அறிந்து இரண்டு மாத வாடகைப் பணத்தை(தலா 5000 ரூபா) தாமே மாணவர்களிடம் நேரடியாக மற்றும் அவ் தனியார் விடுதி உரிமையாளரிடம் வழங்கியதுடன் இக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு எவ்வித சமூக பாரபட்சமுமின்றி சமமான முறையிலே அவர்களின் குடும்ப வறுமையை_மட்டுமே கருத்தில் கொண்டு இவ் உதவியை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.

மேலும் 200_க்கு மேற்பட்ட மாணவர்களின் வாடகைப்_பணத்தை வழங்க தயாராக உள்ளார் எனவும் அதை விட அவர்களுக்கான எவ்வாறான தேவையென்றாலும் தன்னிடம் கேட்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வகை சேவை மனம் கொண்ட தியாகி.அறக்கொடை நிறுவனர் தியாகேந்திரன் அவர்களின் சேவையை உளமார பாராட்டுவதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.