யாழ் போதனா வைத்தியசாலையின் பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்படும்..!

யாழ் போதனா வைத்தியசாலையின் பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்படும்..!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வள பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையிலான பிரதிநிதிகளிகளுடன் அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தற்போது பல வைத்திய சேவை பிரிவுகள் விரிவாக்கம் கண்டுவரும் நிலையில் அதற்கான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஊழியர்களின் பற்றாக்கறை அதிகமாக உள்ளமை இதன்போது அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வைத்தியசாலையானது தற்போது வடபகுதியில் பாரியளவிலான சேவையை முன்னெடுத்து வருகின்றபோதிலும் குறைந்தளவான வசதிகளுடனேயே காணப்படுகன்றது.

யாழ்ப்பாணத்தின் வைத்திய சேவையின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்காக அதனை வளப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பிரிவுகளை யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் விவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை பெற்றுத்தர வேண்டும் என்றும் இந்த கலந்துரையாடலில் கோரப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ யாழ் போதனா வைத்தியசாலையின் தேவைப்பாகளை நிவர்த்தி செய்துகொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி அதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.