திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு நீதிமன்றம் தடையுத்தரவு..!

திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு நீதிமன்றம் தடையுத்தரவு..!

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தினால் இன்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் உள்ளிட்ட சில காரணங்களை முன்னிறுத்தி குறித்த நிகழ்வுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண காவல்துறையினரால் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் 20 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் நாளைய தினம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.