யாழில் இரவு நேரத்தில் மயானத்தில் ஒன்று கூடும் இளைஞர்கள்! காரணம் என்ன?

யாழில் இரவு நேரத்தில் மயானத்தில் ஒன்று கூடும் இளைஞர்கள்! காரணம் என்ன?

வழுக்கையாறு மயானப்பகுதிகளில் மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் மது அருந்தும் இளைஞர்கள் ஒன்று கூடுவதாகவும் இதனால் அப் பகுதியில் மோதல்கள் இடம்பெறுவதாகவும் நவாலி மேற்கு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நவாலி -வட்டுக்கோட்டை பிரதான வீதியின் மையத்தில் வழுக்கையாறு மயானம் உள்ளது.

அண்மையில் மயானப் பாதுகாப்பிற்காக மின் இணைப்புக்கள் மூலம் மின் வழங்கப்படுகின்ற பிரதேசமாக மாற்றப்பட்டது.

கொவிட் 19 காரணமாக தற்போது ஒன்று கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ள போதிலும் மயான கொட்டகை மற்றும் மண்டபம் மதுப்பிரியர்களின் பீடமாக மாறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் வழுக்கையாறு வீதியோரமாக மயானப் பனைகளில் இறக்கப்படும் கள்ளை பருகுவதற்கு இளையோர் முதல் முதியோர் வரை மாலைவேளைகளில் முண்டியடிப்பதாகவும் அவ்வூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.