சுதந்திர சதுக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவந்தன

சுதந்திர சதுக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவந்தன

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிவிந்துள்ளன.

குறித்த நபர் ரஜீவ ஜெயவீர( வயது 64) எனவும் அவர்தான் இறப்பதற்கு முன்னர் தனது சகோதரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் சிறிலங்கன் எயார் லைன்ஸின் முன்னாள் சிரேஸ்ட முகாமையாளராவார்.அத்துடன் “கொழும்பு ரெலிகிராப்” இணையத்தளத்தின் சுயாதீன எழுத்தாளருமாவார். சிறிலங்கன் எயார்லைன்ஸில் நடக்கும் ஊழல்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவர் தொடர்பாக கொழும்பு ரெலிகிராப் ஆசிரியர் உவிந்து குருகுலசூரிய குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் ரஜீவ ஜெயவீர தனது தற்கொலைக்கான காரணத்தை விளக்கி மூன்று பக்க கடிதத்தை எழுதியிருந்ததை தான் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோவிட் 19 நிதிக்காக ஐந்து இலட்சத்தை வழங்கியுள்ளார்.அதேவேளை தனது ஊழியருக்காக ஒரு மில்லியனை வைப்புச் செய்துள்ளார்.அதேநேரம் துப்பாக்கியொன்றை ரூபா 151,500 கொடுத்து வாங்கியுள்ளார். சட்டத்தைமீறி அதை அவர் வாங்கியதற்காக வருத்தப்படுவதாக குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.

ரஜீவ ஜெயவீர டுவிட்டரில் செயற்படுபவரெனவும் தற்போது அவரது டுவிட்டர் செயலிழந்துள்ளதாகவும் ஏன் என தெரியவில்லை எனவும் குருகுலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.