தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வெளியேறிய மேலும் 73 பேர்..!
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த 73 பேர் இன்று வீடு திரும்பினர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடுகெலிய பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் மற்றும் ராஜகிரிய பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த சிலரே இவ்வாறு வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.