மீளவும் பற்றி எரிகிறது லெபனான்

மீளவும் பற்றி எரிகிறது லெபனான்

லெபனான் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தீ விபத்துக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன் தீயை அணைப்பதற்கு படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுமார் ஏழு ஆண்டுகளாக லெபனான் துறைமுகத்தின் சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் அளவிலான அமோனியம் நைட்ரேட் கடந்த மாதம் வெடித்ததில் 191 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையிலேயே மற்றுமொரு பாரிய தீவிபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.