கிளிநொச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்து சென்ற பொலிஸார்

கிளிநொச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்து சென்ற பொலிஸார்

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் கூட்டுறவு சங்கத்தின் பழைய வளாகத்தில் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆண் ஒருவரும், பெண் ஒருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதனையடுத்து அயலவர்கள் தேடுதல் மேற்கொண்ட போதே 2 பேர் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்கள்.

அதனையடுத்து மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் சடலங்களை பார்வையிட்டதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டவர்களில், பெண் தற்போது பட்டதாரி நியமனம் கிடைக்கப்பெற்றவர் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் ஆண் இலங்கை மின்சார சபையில் பணிபுரிகின்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.