நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விபரங்கள்...!

நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விபரங்கள்...!

நாட்டில் நேற்றைய தினம் ஏழு பேருக்கு கொவிட் 19 தொற்றுதியாகியுள்ளது.

இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கே கொவிட் 19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்றுறதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்று வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 189 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.