சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் வௌியான தகவல்....!
கொழும்பு 07 சுதந்திர சதுக்க வளாகத்தில் இருந்து இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டவர் ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் காவற்துறை மேலதிக படை தலைமையகத்தில் தற்காலிகமாக வசித்து வந்தவர் என குறிப்பிடப்படுகிறது. சம்பவத்தில் மீட்கப்பட்ட சடலத்திற்கு அருகாமையில் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.அதேநேரம், குறித்த நபர் தற்கொலை செய்திருக்ககூடும் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு - 07 சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆணொருவரின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டது. அத்துடன் காவற்துறையின் அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக இந்த சடலம் மீட்கப்பட்டதோடு சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பகுதியில் 11 வயதுடைய சிறுவர் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார். சிறுவனை நீண்ட நேரம் காணாத நிலையில் உறவினர்கள் மேற்கொண்ட தேடுதலை அடுத்து கிணற்றிலிருந்து அவர் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.