
19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்க தீவிரம் காட்டும் அரசு
அரசியல் யாப்பில் 19ஆவது திருத்தச்சட்டத்தை விரைவாக நீக்குவதற்காக மக்கள் வழங்கியுள்ள ஆணையை புறம் தள்ள அரசாங்கம் தயாரில்லை என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரிக்கு நேற்று விஜயம் செய்தார். அங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டத் துறைச்சார்ந்தோர் இதற்கு சாதகமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இதற்கு அமைவாகவே திருத்த வரைவு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
19ஆவது அரசியல் அமைப்பு நீக்கப்படும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இதற்காக மக்கள் வரலாற்றில் முதல் தடவையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை சமகால அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள்.
இதனை துரிதமாக நிறைவேற்ற முடியாவிட்டால் அது மக்களுக்கு எதிரான துரோகச் செயலாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.