
மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த 296 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த 296 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி சவூதி அரேபியாவிலிருந்து 258 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.11 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதேபோல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 10 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.23 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும், 28 இலங்கையர்கள் தோஹாவிலிருந்து அதிகாலை 1.33 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.
விமான நிலையத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.