ஜா-எல மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை

ஜா-எல மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை

ஜா-எல மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலாவது மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலையாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை நாளொன்றுக்கான சராசரி ஆயிரத்து 500 கிலோ வரை அதிகரிப்பது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த தொழிற்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்து தீர்க்கமான மற்றும் சாதகமான முடிவொன்றை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.