ஜனாதிபதி ஆணைக்குழுவில் முதன்முறையாக முன்னிலையான புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி
தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக கடமையாற்றிய ஓய்வு பெற்ற பிரதி காவல்துறைமா அதிபர் சிசிர மென்டிஸ் நேற்று முதல்முறையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையானார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையானார்.
அதேநேரம், முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹஸ்புல்லா இன்று இரண்டாவது நாளாகவும் ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
அத்துடன் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா ஆகியோரும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவற்துறை பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
இதேவேளை, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அந்த ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவிலும் முன்னிலையாகியிருந்தனர்.