ஆனைவிழுந்தான் வன அழிப்பு- விசேட குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு

ஆனைவிழுந்தான் வன அழிப்பு- விசேட குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு

புத்தளம் – ஆனைவிழுந்தான் ரம்சார் (Ramsar) ஈரவலய புகலிட நிலத்தை சட்டவிரோதமாக துப்புரவு செய்தமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை விடயத்திற்கு பொறுப்பான சீ.பி.ரத்னாயகவிடம் கைளிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவுக்கு வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தலைமை தாங்கினார். அதன்படி விடயம் தொடர்பிலான அறிக்கையில் 13 பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இறால் வர்த்தகர் மற்றும் இயந்திர வாகன சாரதி ஆகியோர் இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.