பசிந்து நிரோஸனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்....! காணொளி

பசிந்து நிரோஸனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்....! காணொளி

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விருந்து உபசாரத்தின் பின்னர் வாகன சில்லு ஒன்று வீழ்ந்து காயமடைந்த பசிந்து நிரோஸனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த மாணவர் பசிந்து நிரோஷன் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் நேற்று குணமடைந்து அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விருந்து உபசாரத்தின் பின்னர் வாகனசில்லு ஒன்று வீழ்ந்த விபத்தில் அவர் காயமடைந்தார். இதனையடுத்து அது தொடர்பில் முன்னெடுத்த விசாரணைகளில் பகிடிவதை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்திருந்தது.

அதன்பின்னர் சம்பவம் தொடர்பில் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததோடு 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.இந்தநிலையில் பசிந்து நிரோஷன் மினுவாங்கொடை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்னும் பூரண குணமடையவில்லை என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த விடயத்தில் பசிந்து நிரோஷனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.