வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது..!

வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது..!

சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒருத்தொகை சிகரெட் வகைகளை வைத்திருந்த இருவரை டயகம காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

rn

கம்பளை பிரதேசத்தில் இருந்து டயகம பிரதேசத்திற்கு வருகை தந்து கடைகளுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த வேளையில்  08.09.2020 இன்று மதியம் சுற்றிவளைத்து   சோதனையிட்ட போதே 150 வெளிநாட்டு சிகரெட் பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டயகம, அக்கரப்பத்தனை, லிந்துலை போன்ற நகரங்களை இலக்கு வைத்து இவ்வாறான சிகரெட் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக முதல்கட்ட விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

rn

குறித்த சந்தேக நபர்களான இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் செலுத்திய முச்சக்கரவண்டியும் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன். சந்தேக நபர்களையும், முச்சக்கரவண்டியையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக டயகம காவல் துறையினர் தெரிவித்தனர்.

rn