வரவு செலவு திட்டத்தின் பின்னரா நீக்கப்படும்...!

வரவு செலவு திட்டத்தின் பின்னரா நீக்கப்படும்...!

இரத்தினக்கல் மற்றும் நகை ஆபரண கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 சதவீத வருமான வரி மற்றும் தங்க இறக்குமதி வரியான 15 வீதத்தையும் வரவு செலவு திட்டத்தின் பின்னரே நீக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக இரத்தினக்கல் மற்றும் நகை ஆபரண அதிகார சபை தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதியினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, விசேடமாக குறித்த திட்டமானது உற்பத்தியாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டு்ளளதாகவும் அவர் குறிப்பிட்டார்.