யாழில் சங்கிலிய மன்னனுக்கு 401 ஆவது நினைவஞ்சலி
சங்கிலிய மன்னனின் 401 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் செம்மணிச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துனைத்தூதரகத்தின் தூதுவர் பாலச்சந்திரன், யாழ்.மாநகர பதில் முதல்வர் ஈசன், மறவன்புலவு சச்சிதானந்தம் மற்றும் மதத்தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேவேளை ஜமுனா ஏரியிலும் சங்கிலிய மன்னனுக்காக மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.