கடுமையாக பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள்! அரசாங்கம் உடனடியாக எடுத்த நடவடிக்கை

கடுமையாக பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள்! அரசாங்கம் உடனடியாக எடுத்த நடவடிக்கை

நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சாவித்திரி ஜயக்கொடி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பதற்காக வீட்டு உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

நாட்டின் 21 மாவட்டங்களில் கடும் காற்று மழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்துள்ளன.

கடுமையான பாதிப்புக்குள்ளான மூன்று மாவட்டங்களுக்கு துரிதமாக நிவாரனங்களை பெற்றுக் கொடுப்பதற்காக 15 இலட்சம் ரூபாவை அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை படிப்படியாக மாற்றம் அடையும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் என்றும் அதனால் கடல் கொந்தளிப்பு காணப்படும் என குறிப்பிட்டுள்ள வானிலை அவதான நிலையம் கடற்தொழிலில் ஈடுபடுவோர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

சிறு படகுகளில் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் அதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்த நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை கடல் கொந்தளிப்பு காணப்படும் நிலையில் கடல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என சில பிரதேசங்களில் நேற்று முன்தினம் முதல்மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.