மருத்துவபீட அனுமதியை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம்

மருத்துவபீட அனுமதியை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம்

அரசாங்க பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 350 ஆக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மருத்துவபீடத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். எல். பீரிஸ் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் மருத்துவ பீடாதிபதிகள் அனைத்து அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பீடாதிபதிகள் உடன் பல சுற்று கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இந்த கலந்துரையாடல் கடந்த 4 ஆம் திகதி கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ். எல்.பீரிஸின் தலைமையில் நடைபெற்றது.

அரசாங்க பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.