சடலமாக மீட்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டார்..
கொழும்பு சுதந்திர சதுக்கம் பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்ட நபர் பம்பலப்பிட்டி பொலிஸ் பார்க் பிரதுதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவாத்தோட்டம் காவற்துறை இதனை தெரிவித்துள்ளது 64 வயதுடைய நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த நபரின் சடலத்திற்கு அருகாமையில் இருந்து துப்பாக்கி ஒன்றும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.