1,379 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது

1,379 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது

மன்னார் - சாந்திபுரம் பகுதியில் பாரவூர்தியில் ஏற்றிச்செல்லப்பட்ட ஆயிரத்து 379 கிலோ கிரேம் மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மஞ்சள் தொகை புத்தளம் நோக்கி கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள மஞ்சள், இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மன்னார் பகுதியை சேர்ந்த 42 வயதானவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.