வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை

வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் இறுதி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

பாதசாரிகள் நடக்கும் வழியில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நடைபாதையில் வாகனம் நிறுத்தப்பட்டால், அதனை அகற்றும்போது சேதம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான செலவினை பொலிஸார் ஏற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இந்திக்க ஹப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.