துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தும் ரவைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் மினுவங்கொட நில்பனாகொட பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போர 12 ரக துப்பாக்கி ஒன்றையும், போர 12 ரக ரவைகள் 7 மற்றும் T56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 3 ரவைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.