250 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து...!

250 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து...!

எட்டியாந்தோட்டை ஹல்கொல்ல பகுதியில் பேருந்து ஒன்று சுமார் 250 அடி பள்ளத்தில் பேருந்து ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.