
விசேட சுற்றிவளைப்பில் 455 பேர் கைது
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் 455 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணி தொடக்கம் இன்று காலை 5 மணி வரையிலான காலபகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதன்போது ஹெரோயின் போதை பொருளுடன் 170 பேரும் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 136 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.