முட்டை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை...!
முட்டை விலை அதிகரித்துள்ளமையினால் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்குமாறு அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் குறித்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கோரிக்கையினை அமைச்சரவையில் முன்வைத்ததன் பின்னர் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து 2 ரூபாய் குறைப்பதாக முட்டை விநியோகத்தர்கள் இணக்கமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.