M-T - New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல்...!
M-T New Diamond கப்பலில் உள்ளக வெப்பம் காரணமாக மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கடந்த தினம் இந்த கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தநிலையில், கடும் போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, கப்பல் இலங்கையில் இருந்து தொலைவுக்கு நகர்த்தப்பட்டிருந்தது.
எனினும் கப்பலில் நிலவிய உள்ளக வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தற்போது இந்த கப்பல் உள்ள கடற்பரப்பில் கடுமையான காற்றுவீசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
%MCEPASTEBIN%