வாகன உதிரிப்பாகங்களுக்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு
இலங்கையில் வாகன உதிரிப்பாகங்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாக விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சில வகையான வாகன சில்லுகள் சந்தையில் விற்பனைக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட வாகனங்கள் தந்போது சந்தையில் விற்பனைக்கு உள்ளன.
எனினும் தரமுயர்ந்த மகிழுந்து உள்ளிட்ட வாகனங்கள் கையிருப்பில் இல்லை என தெரிய வருகின்றது.
வாகன இறக்குமதியாளர்களுக்கு எந்தவிதமான சலுகையும் அரசாங்கத்தினால் வழங்கப்படாத நிலையில் 25 சதவீதமான வாகன விற்பனையாளர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டியுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது நாட்டில் 500 வாகன விற்பனையாளர்கள் உள்ள போதிலும் 20 பேரே வாகன விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.