கொரோனாவுக்கு முகங்கொடுத்துள்ள மற்றுமொரு IPL அணி

கொரோனாவுக்கு முகங்கொடுத்துள்ள மற்றுமொரு IPL அணி

இந்த முறை இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிகளில் விளையாடவுள்ள டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் உதவி வைத்தியருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவருக்கு முன்னதாக மேற்கொள்ள இரண்டு பரிசோதனைகளின் போது தொற்றுறுதியாகியிருக்கவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வைத்தியர் வீரர்களுடன் தொடர்புபட்டிருக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் முழுமையாக குணமடைந்த பின்னர் மீண்டும் அணிக்காக சேவையாற்றுவார் என டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி அறிவித்துள்ளது.