பல்கலைக்கழக மாணவியை கடத்த முயற்சித்த நபர்...!
களனி பல்கலைக்கழத்தின் மாணவி ஒருவரை கடத்த முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடை வேவெல்லுவ வீதியில் மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தமை தொடர்பில் முறைப்பாடொன்று காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து 38 வயதுடைய வத்தளை ஹேகித்த பகுதியில் வசிப்பவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சம்பவத்துடன் பிரிதொரு நபரும் தொடர்பு பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவர் தற்பொழுது தலைமறைவாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.