காவல்துறையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் 637 பேர் கைது
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 637 பேர் கைது செய்யப்ப்டுள்ளனர்
அவர்களில் 283 பேர் ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று காலை 6 மணிமுதல் இன்று அதிகாலை 5 மணி வரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர வௌ;வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.