19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதற்கான காரணத்தை வெளியிட்ட நீதி அமைச்சர்

19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதற்கான காரணத்தை வெளியிட்ட நீதி அமைச்சர்

ஜனாதிபதி நாட்டுக்கான சேவையை முன்னெடுக்கப்பதற்காகவே 19 வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் அச்சம், சந்தேகம் இன்றி வாழ்வதற்கான நாட்டை உருவாக்குதற்கான வேலைத்திட்டங்களையே தாம் முன்னெடுத்து வருகின்றோம்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.<br /><br />ஜனாதிபதிக்கு சேவையாற்றக்கூடிய சூழலை உருவாக்கி கொடுப்பதற்காகவே 19 ஆம் திருத்தம் நீக்கப்படவுள்ளது.

19 ஆம் திருத்தச் சட்டத்தில் காவற்துறை ஆணைக்குழு ஒன்றை உருவாக்கி அதற்கு அதிகாரம் வழங்கப்பட்;டது.

இதனூடாக குற்றச்செயல்களை குறைக்கும் நோக்கிலே குறித்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

ஆனால் இதன்மூலம் குற்றங்கள் குறைந்ததா அல்லது கூடியதா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது

ஆணைக்குழுக்கள் முக்கியமல்ல, மக்களுக்காக பாதுகாப்பு வழங்குவதே அவசியம் என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.