தனிமைப்படுத்தலில் இருந்த நபர் திடீர் மரணம்- நுவரெலியாவில் சம்பவம்
நுவரெலிய ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
56 வயதுடைய ஜா எல-கொடுகொட பிரதேசத்தில் வசிக்கும் இவர் கடந்த 31ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பியிருந்தார்.
காலில் ஏற்பட்டிருந்த காயம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றின் காரணமாக இவர் கடந்த 2ஆம் திகதி நுவரெலிய அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், இவர் இலங்கை வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையொன்றிலும் சிகிச்சைப் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நுவரெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.