ரணில் எடுக்கவுள்ள முடிவு! தயாராக இருக்கும் ருவான் விஜேவர்தன
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தான் முழுமையாக தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இளம் தலைமைத்துவம் வர வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இதனால், இந்த வாரத்தில் தீர்மானம் ஒன்றை எடுப்பார் என நான் நினைக்கின்றேன். கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க நான் நிச்சயம் தயாராக இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து கருத்து வெளியிட்டுள்ள ருவான் விஜேவர்தன, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு செல்ல போவதில்லை என நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றேன்.
நாடாளுமன்றத்திற்கு செல்வதென்றால் மக்களின் வாக்குகளிலேயே செல்ல எதிர்பார்த்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.