
ஸ்ரீலங்காவில் மரண தண்டனை கைதிகளுக்காக குட்டித் தீவு
பாரிய குற்றங்களுக்காக மரண தண்டனை வழங்கப்பட்ட கைதிகளை மட்டக்களப்பிலுள்ள தீவொன்றில் தடுத்து வைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் தொழு நோயாளர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தீவில், தற்போது இரண்டு நோயாளர்கள் மாத்திரமே இருப்பதாகவும் அவர்கள் இருவரும் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தீவை சிறைச்சாலைகள் திணைக்களம் பொறுப்பேற்று, பாரிய குற்றங்களை செய்த குற்றவாளிகள் மற்றும் மரணத் தண்டனை வழங்கப்பட்டவர்களை இத்தீவில் தடுத்து வைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.