உடனடி திட்டங்கள் எதுவுமில்லை-பசில் வெளிப்படை
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை என்று பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் மூலம் இரட்டைக்குடியுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு செல்ல வழி வகுக்கும் என தகவல்கள் வெளிவந்தன.
என்னும் நாடாளுமன்றத்திற்குள் செல்லும் திட்டம் இருக்கிறதா என்று இன்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, இலங்கை மற்றும் அமெரிக்க இரட்டை குடிமகனான பசில் ராஜபக்ஷ, தான் தற்போது இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) உறுப்பினர்கள் ஒருபோதும் அதை ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற அடிப்படையில் அந்த நேரத்தில் 19 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
20 வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிக அதிகாரங்களைப் பெறுவதையும் பசில் நியாயப்படுத்தியுள்ளார்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவிக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம் பொதுமக்கள் அத்தகைய அதிகாரத்தை அவருக்கு வழங்கினர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.