திடீரென ஆற்றுக்குள் வீழ்ந்த மகிழுர்தி...! காணொளி
பாணந்துறை ஹிரண பகுதியில் அமைந்துள்ள பொல்கொட ஆற்றில் சிற்றூர்ந்து ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 7.30 இற்கு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.