எண் 1, 10, 19, 28 இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்! உங்களின் முழு பலன் இதோ

எண் 1, 10, 19, 28 இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்! உங்களின் முழு பலன் இதோ

எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிற்தநவர்கள் குணங்கள் என்ன என்பதைப் பற்றி பார்போம்.

குணங்கள்

தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்த கொள்வார்கள்.

மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.

அரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள் இவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். ஒன்றின் எண் ஆதிக்கம் நன்கு அமைந்திரந்தால், (பெரும்பாலும்) இவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்குடன் விளங்குவார்கள்.

அதிகாரம் காண்பிப்பதில் இவர்கள் மிகவும் ஆசை கொண்டவர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். கடின உழைப்பும், கண்டிப்பான நடத்தையும் இவர்களைத் தலைமை ஸ்தானத்திற்குக் கொண்டு செல்லும்.

 

மனதல் ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள். தோல்வி ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத் துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள்.

உடல் அமைப்பு

நடுத்தரமாக உயரம், கம்பீரமான பார்வை, எடுப்பான நெற்றியும் உண்டு. நீண்ட தோள்களும் நன்கு வளைந்த புருவமம் உண்டு. உறுதியான பற்கள் உண்டு. ஆண்தன்மை உடைய தோற்றம் உண்டு.

நடையில் ஒரு கம்பிரம் காணப்படும். பெண்களாக இரந்தால் ஓரளவு ஆணாதிக்க உடல் அமைப்பும், குணங்களும் உண்டு. கணவனைத் தனது ஆதரவிற்குள் கொண்டு வருவார்கள். அவரை நல்ல வழியில் உயர்த்தி விடுவார்கள்.

குடும்ப வாழ்க்கை

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கலாரசனை உடையவர்கள். ஆகையால் இளமையில் அடிக்கடி காதல் வயப்படுவதும், காதல் விளையாட்டுகளில் ஈடுபடவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அனேகமாக இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

பொருளாதாரம்

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலை ஒரே சீராக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையையும், உயர்தரமான ஆடை அணிகலன்கள் அணிவதையுமே விரும்புவார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். கடன்கள் அதிகம் ஏற்படாது. ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.

தொழில்

ஒன்றாம் எண் சூரியனின் ஆதிக்கம் கொண்டது. எதிலும் முதன்மையாக செயல்படக்கூடிய திறன் கொண்டவர்கள், வாழ்வில் அதிகம் சம்பாதிக்கும் திறமை, நல்ல உயர்வான பதவிகள், பலரை நிர்வாகிக்கும் பொறுப்பு யாவும் அமையும். அரசியல் சம்மந்தப்பட்ட துறைகளில் நல்ல முன்னேற்றம் கிட்டும்.

நண்பர்கள் பகைவர்கள்

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு அதிகார குணம் இருக்கும். இவர்களை அனுசரித்து நடப்பவர்கள் மட்டுமே இவர்களுக்கு நண்பர்களாக இருக்க முடியும்.

2,9,3 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நண்பர்களாகவும் 4,5,7,8 ஆகிய எண்களில் இவர்களுடன் ஒத்து பழக முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நாட்கள்

ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 மற்றும் தேதி மாதம் ஆண்டு கூட்டினால் 1 வரும் தினங்கள் அதிர்ஷ்டமானவை 28ந் தேதி நடுத்தரப் பலன்களே. 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பல நல்ல பலன்கள் தானே வரும். ஆனால் நாம் தேடிச் சென்றால் தலைகீழ பலன்களே ஏற்படும். 2, 7, 11, 16, 20, 25, 29 தேதிகளில் ஓரளவு நல்ல பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறங்கள்

பொன்னிற உடைகளும், மஞ்சள், லேசான சிவப்பு நீலம் ஆகிய நிறங்களும் நன்மை தரும். கருப்பு மற்றும் பாக்கு நிற உடைகளையும் வர்ணங்கள் உபயோகங்களையும் தவிர்க்க வேண்டும்.

பரிகாரங்கள்

ஓன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரிய தேவனுக்கு பரிகாரம் செய்வது நல்லது. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.