அனுராதபுரத்தில் கைதான மாணவர்களை எச்சரித்து விடுவித்த காவல்துறை

அனுராதபுரத்தில் கைதான மாணவர்களை எச்சரித்து விடுவித்த காவல்துறை

மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக வீடுகளில் தெரிவித்துவிட்டு அனுராதபுர புனித பூமியில் முறையற்ற விதத்தில் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 100 மாணவர்கள் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது பெற்றோர்கள் முன்னிலையிலேயே இவ்வாறு எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் அனைவரும் இன்று காலை அனுராதபுர குளங்களின் சுவர்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் புகையிரத மார்க்கங்களுக்கு அருகில் சுற்றித் திரிந்துக்கொண்டிருந்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படட மாணவர்களில் பலர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.