சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக பொதியொன்றை வீச முற்பட்ட நபர் கைது
முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட கைப்பேசி மின்கலம் 10 (Battery), ஹெரோயின் 2 கிராம் 350 மில்லிகிராம் மற்றும் 36 ஆயிரம் ரூபா பணத்தை ஒன்றாக பொதி செய்து வெலிகட-மகஸின் சிறைச்சாலை மதிலுக்கு மேலாக வீச முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றப் பிரிவுக்கு கிடைத்த தகலுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.