கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டதாக கடற்படை தளபதி அறிவிப்பு

கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டதாக கடற்படை தளபதி அறிவிப்பு

MT New Diamond எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவலானது முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த எண்ணெய்க் கப்பல் கடற்படையின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கப்பல் தற்போது நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் பலத்த காற்று வீசி வருவதாக கடற்படை ஊடக செய்தித் தொடர்பாளர் இந்திக டி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதன் காரணமாக குறித்த கப்பலில் சிறிய அளவிலோ அல்லது மீண்டும் தீப்பற்றக்கூடிய வாய்ப்புக்களோ உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.