வவுனியா-பூவரசங்குளம் பகுதியில் புதையல் அகழ்சில் ஈடுபட்ட 8 பேர் கைது

வவுனியா-பூவரசங்குளம் பகுதியில் புதையல் அகழ்சில் ஈடுபட்ட 8 பேர் கைது

வவுனியா - பூவரசங்குளம் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பூவரசங்குளம் காவல்துறைக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் பூவரசங்குளம், கம்பஹா, கடவத்தை, அதுருகிரிய, கட்டுநாயக்க, வெயங்கொட மற்றும் பாதுக்க பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி உட்பட சில பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் 23 தொடக்கம் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.