நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவு

நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவு

நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 925ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மூவாயிரத்து 121பேரில் இன்னும் 184 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 57 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 12 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.