திருத்தச் சட்டத்திற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை: ஐக்கிய மக்கள் சக்தி பதிலடி
19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
19ஆவது திருத்தச்சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டுமென அரசாங்கத்தில் சிலர் கூறி வருகின்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கவும் செய்த முட்டாள் தனமான செயற்பாடுகளினால்தான் இந்த நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவேதான் மக்கள் எமது ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரினார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.