ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் நல் நிலைக்கான பயணம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் நல் நிலைக்கான பயணம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன், குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் (FRC) ஏற்பாட்டில் வட மாகாணத்தில் நல் நிலைக்கான பயணத்தின் மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.

சிறந்த உளநலத்தை பேணுவதன் முக்கியத்துவம் மற்றும் நிச்சயம் அற்ற காலப் பகுதியில் பயனுள்ள உபாயங்களை கண்டறிவது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் நடைபயணம் மேற்கொள்ளப்படுகின்றது.

நல் நிலைக்கான பயணத்தின் முதலாம் கட்டம் 2018 ஆம் ஆண்டு மன்னாரில் இருந்து வவுனியா வரையும் இரண்டாம் கட்டம் 2019 ஆம் ஆண்டு வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு வரையும் முன்னெடுக்கப்பட்டது.

மூன்றாம் கட்டப் பயணமானது, முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படுவதுடன், நாட்டில் தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு மெய்நிகர் பயணமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் வரையான நடைபயணத்திற்கு 1400 நிமிடங்கள் செலவாகும்.

நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் சமூகத்தை மேலும் கட்டியெழுப்ப உதவும்.

உளநலம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் நடைபயணத்தில் நாடளாவிய ரீதியில் எம்முடன் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள் என ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மெய்நிகர் நடைபயணத்தில் பங்குபற்றுவோரில் ஒரு அதிஷ்டசாலிக்கு வெகுமதியான பரிசு ஒன்றும் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பரிசை தட்டிச் செல்வதற்கு தகைமை பெற பின்வரும் செயன்முறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

01.நீங்கள் எங்காவது மகிழ்ச்சிகரமான செயற்பாடுகளில் ஈடுபட நடந்து செல்வதற்கு முன்னர் (அன்புக்குரியவர்களை சந்திக்க செல்லுதல், பொருட்களைக் கொள்வனவு செய்ய அங்காடிகளுக்கு செல்லுதல் போன்றை) நேரக்கணிப்பானை செயற்படுத்துங்கள். இதற்காக உங்களது கையடக்கத் தொலைபேசி அல்லது கைக்கடிகாரத்தை பயன்படுத்த முடியும்.

02.நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து செல்பி அல்லது இருக்கும் இடத்தின் புகைப்படமொன்றை எடுத்து முகநூலில் பதிவேற்றுங்கள்.

03.பதிவேற்றும் போது நீங்கள் நடப்பதற்காக எடுத்துக்கொண்ட நேரத்தை சரியாக குறிப்பிடுங்கள்.

04.அப்பதிவில் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தை (@family rehabilitation centre) Tag செய்யுங்கள்.

05.உங்களுடைய படவிளக்கத்தில் #PTH3 #Seenorth #Walk4metalHealthSL எனும் சதுரக்குறியீட்டு சொற்களை (Hashtags) குறிப்பிட மறவாதீர்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.