20வது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நவம்பர் முதல் வாரத்தில்
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது
இன்னும் 10 நாட்களுக்குள் இந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதனிடையே 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் மற்றும் பல சிவில் அமைப்புகள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
அத்துடன் இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக எடுக்க வேண்டிய வேறு மாற்று நடவடிக்கைகள் சம்பந்தமாக தற்போது கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் தேசிய அமைப்புகள் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தன.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இருக்கும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை 20வது திருத்தச் சட்டத்திலும் உள்ளடக்கப்பட வேண்டும் என அவை கூறியிருந்தன.