தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறிய 552 பேர்..!

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறிய 552 பேர்..!

முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 552 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

கொவிட்19 தொற்றை தடுக்கு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரையில் 37 ஆயிரத்து 552 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 7 ஆயிரத்து 403 பேர் 70 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் ஆயிரத்து 880 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 610 பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் கந்தக்காடு புனர்வாழ்வளிப்பு நிலையத்துடன் தொடர்புடைய 626 பேர் குணமடைந்துள்ளனர்.

அவர்களில் 14 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, டுபாயில் சிக்கியிருந்த மேலும் 21 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் கட்டாரில் இருந்து 64 பேரும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அனைவரும் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.