மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நாளையதினம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காலை 08.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரையான காலப்பகுதியில் குறித்த மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, வவுனியா பிரதேசத்தில் பூவரசங்குளம், ஆண்டியப்புளியங்குளம் ஆகிய இடங்களிலும் மன்னார் பிரதேசத்தில் கற்கிடந்தகுளம் பிரதேசத்திலும் மின் விநியோகம் தடைப்படவுள்ளது.